ஜெர்மனி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
ஜெர்மனி நாட்டில் சுற்றுப்புற சூழல் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை பாதுகாக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் விஸ்லின் அவர்கள் சுற்றுப்புற சூழல் ஆர்வாலர் அமைப்பான லெட்றல் கெனரல் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினுடைய பேச்சாளர்களையும் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குப்பற்றுகின்ற பங்கு பற்றாத நபர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தையை நடாத்தி இருக்கின்றார்.
அதாவது எதிர்வரும் காலங்களில் இவ்வகையான சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் கேட்டு அறியப்பட்டதாக தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக அரசாங்கமானது எதிர்கால சந்ததியினருடைய நலனை கருத்தில் கொண்டு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டும் என்று இந்த அமைப்பினர் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது இந்த அமைப்பினுடைய பேச்சாளரான ஹய்மின் ஃவன் என்பவர் இவ்வாறு தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.
கடந்த காலங்களில் ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநில அரசாங்கம் சுற்று சூழல் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது.
அதில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற வகையில் மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிப்பதற்காக ஒரு நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.