கொழும்பு அம்மன் கோவிலில் இராணுவ தளபதி விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை
எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிர்வாதம் வேண்டி இந்து பாரம்பரியத்தின் சிறப்பு ஆசீர்வாத பூஜை கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஆசீர்வாத’ பூஜா வைபவம் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் இராணுவக் கொடியை ஏற்றி ஆசீர்வதித்தது.
அனுசரிப்புகளுக்குப் பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் அமைப்பின் அனைத்து அங்கத்தவர்கள் சார்பாக கோவிலின் அபிவிருத்திப் பணிகளுக்காக பண நன்கொடையை வழங்கினார்.
இந்த பிரார்த்தனையில் ராணுவ இந்து சங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.





