மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை ஆராய இலங்கையில் விசேட குழு நியமனம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கில் போர் நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்வதற்கும், பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகள், தாக்கத்தின் அளவு மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்வதற்கும் இந்த அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைதுணைக்குழுவிற்கு உதவ அமைச்சக செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)