ஸ்பெயின் பிரஜை ஒருவர் இலங்கையில் கைது : மீட்கப்பட்ட பொருள்!
இலங்கையில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்க அமைய காலி பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 38 வயதுடைய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவராவார். அவரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 06 கிராம் 12 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் உரிய போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.





