இலங்கையில் 12 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம்….
அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் டித்வா புயல் காணமாக இலங்கை முழுதும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக மத்திய மலை நாட்டின் பல பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டன.
அந்த வகையில் கடந்த 26 ஆம் திகதி வலப்பனை முங்வத்த கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள முங்வத்த கிராமத்தின் தற்போதைய கவலைக்குறிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
குறித்த பகுதியில் 12 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்கள் 12 நாட்களுக்கும் மேலாக கடும் நெருக்கடியில் உள்ளனர். மேலும் அனர்த்தங்களால் இந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





