பிரான்ஸில் பல வருட பிரச்சினைக்கு தீர்வு – பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி
பிரான்ஸில் சின்னம்மை நோயை ஒத்த chickenpox virus நோய்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு புதிய தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அற்றவர்களில் மூன்றில் ஒருவருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
சிறிய சிவப்பு நிற பருக்கள் உடலில் தோன்றும் இந்த நோய் உடலில் மிகுந்த வலியை ஏற்படுத்துவதோடு, உடல் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
இந்த நோய்த்தொற்றுக்கு நிவாரண மருந்துகள் இருந்தாலும், அவை நூறு வீதம் நிவாரணம் அளிப்பதில்லை. அனால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது.
இந்த நிலையில் chickenpox virus தொற்றுக்கு எதிரான ஒரு தடுப்பூசி விரைவில் பிரான்சுக்கு அறிமுகமாக இருப்பதாக பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த தடுப்பூசி பெல்ஜியம், ஜெர்மன் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது எனவும். தரமான நிவாரணத்தை வழங்கிகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.