வட அமெரிக்கா

புளோரிடாவின் கிளியர்வாட்டரில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது!

புளோரிடாவின் கிளியர்வாட்டரில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துகுள்ளானதில் விமானி மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீச்கிராஃப்ட் 35 பொனான்சா என்ற ஒற்றை எஞ்சின் விமானம் வெரோ பீச் பிராந்திய விமான நிலையத்தில் இருந்து மாலை 6:08 மணிக்கு புறப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விமானமானது, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள கிளியர்வாட்டர் என்ற நகரத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தரையிறங்குவதற்கு முன்பதாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

62 வயதான விமானி , விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகப் புகாரளித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!