இலங்கை செய்தி

பரிதாபமாக உயிரிழந்த ஆறு மாத குழந்தை!! தாய் கைது

ஊருபொக்க, மகிழியதென்ன பிரதேசத்தில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயான 21 வயதுடைய பெண் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, நாய் தனது காலைப் பிடித்ததால் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக குழந்தையின் தாய் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் குழந்தையின் பிரேத பரிசோதனையின் பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி டி.டி. மண்டை ஓடு, மூளை, முதுகுத்தண்டு, மார்பு, வயிறு, கீழ் தாடை ஆகிய பகுதிகளில் மழுங்கிய சக்தியை செலுத்தியதால் குழந்தையின் மரணம் நிகழ்ந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

உரிய பிரேதப் பரிசோதனைத் தகவலின் பிரகாரம் ஊர்பொக்க பொலிஸார் குழந்தையின் தாயை கைது செய்து நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை