தலைமுடி உதிர்வதை தடுக்கும் எளிய முறை..!
உலகில் இன்று ஆண், பெண் என இருபாலருக்கும் தலைமுடி உதிரும் பிரச்சினை பெரும் பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கு தலைமுடி உதிரும் பிரச்சினை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் சாப்பிடும் உணவு தான் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நாம் தலைமுடி உதிர்வதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம். இதில் தலை முடி உதிர்வதை தடுக்க பல்வேறு இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் தற்போதைய மருத்துவ முறைகளும் பின்பற்றப்படுகிறது ஆனால் தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்து இருந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினையை போக்கிவிடலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் சாரைப்பருப்பு என்ற விதை தலைமுடி உதிர்வதை தடுக்கும் என கூறப்படுகிறது.
இந்த விதையில் உள்ள இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் தலைமுடி ஆரோக்கியத்திற்கு அவசியமான அதிக புரதத்தை கொடுக்கிறது. மேலும், தலைமுடி உதிர்வதை தடுக்கவும் முடி உரைவதை தடுக்கவும் சாரைப்பருப்பு பெரும் பங்கு வைக்கிறது.
இந்த சாரை பருப்பு விதையை காலையில் எழுந்தவுடன் இரவில் ஊற வைத்த ஊற வைத்த பருப்பை 4 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு முக்கிய மருந்தாக பயன்படும் என நம்பப்படுகிறது.