இங்கிலாந்தின் பல பகுதிகளில் மழைக்கான அறிகுறி : மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என MET OFFICE எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அலுவலகம் நாடு முழுவதும் பல மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இது பிரிட்டனின் வெப்பமான காலநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாகத் தெரிகிறது.
மேற்கு மற்றும் மத்திய வடக்கு அயர்லாந்தில் முதலில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
டெர்ரி, ஓமாக், என்னிஸ்கில்லன், நியூரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆகவே மின்வெட்டு அபாயம் இருப்பதாகவும், வாகன சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அந்நாட்டு வானிலை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.





