ஜப்பானில் உள்ள ஷாப்பிங் மால் தீயில் எரிந்தது! மீட்புப் பணிகள் தொடர்கின்றன

புத்தாண்டின் மூன்றாம் நாளான இன்று ஜப்பானில் இருந்து சோகமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
ஜப்பானில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி இன்று பிற்பகல் 03:00 மணியளவில் ஜப்பானின் Fukuoka நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயில் சிக்கியவர்களைக் கண்டறியும் பணியில் மீட்பு பணிக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
எரியும் வர்த்தக நிலையத்திலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகையும் வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டும், நீண்ட நேரமாகியும் தீயை அணைக்க முடியவில்லை.
வர்த்தக நிலையத்தைச் சுற்றியுள்ள கடைகளுக்கும் தீ வேகமாகப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தபடி, அந்த கடைகளின் ஊழியர்களும் தீயில் இருந்து தப்பிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.