சிங்கப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சடலம்
சிங்கப்பூரில் உட்லண்ட்ஸில் அமைந்துள்ள ரிபப்ளிக் பாலிடெக்னிக் அருகே 49 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
7 உட்லண்ட்ஸ் அவென்யூ 9ல் கடந்த சனிக்கிழமை நடந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து பிற்பகல் 2.45 மணிக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபர் இறந்தது அங்கு சென்ற அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
மேலும் எந்த ஒரு சதிச் செயலும் இதில் சந்தேகிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
ரிபப்ளிக் பாலிடெக்னிக் பள்ளி வளாகத்திற்கு வெளியே அந்த நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)





