ஐரோப்பா

பாரிஸில் நகை வாங்க சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளது.

370,000 யூரோக்கள் பெறுமதியான நகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

நகைகளை விற்பனை செய்ய முற்பட்டவேளையில் அவை திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் avenue Kelber வீதியில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் வைத்து 80 வயதுடைய பெண்மணி ஒருவர் தனது நகைகளை விற்பனை செய்வதற்காக ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் குறித்த நகைகளை வாங்குவதற்காக இரு நபர்கள் அழைக்கப்படிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, நகையை வாங்க வந்த இருவர் குறித்த பெண்மணியிடம் இருந்து நகைகளை திருடிக்கொண்டு கண்ணிமைக்கும் நொடிக்குள் மாயமாகியுள்ளனர்.

பின்னர் குறித்த பெண்மணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!