அமெரிக்காவில் உணவக ஊழியர் மீது உணவை வீசிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் விரைவு உணவகத்தில் ஊழியர் மீது உணவை வீசிய பெண்ணுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு அந்தக் கடையில் பணியாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒஹாயோ மாநிலத்தில் 39 வயது ரோஸ்மேரி ஹெய்ன் (Rosemary Hayne) Chipotle உணவகத்தில் burrito bowl எனும் உணவை வாங்கினார்.
உணவு பரிமாறப்பட்ட விதம் அவருக்குப் பிடிக்கவில்லை. குரலை உயர்த்தி ஊழியரைத் திட்டிய ஹெய்ன் ஊழியரின் முகத்தில் உணவை வீசினார்.
ஹெய்னுக்கு அபராதமும் 180 நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனைக் காலத்தைக் குறைக்க நீதிபதி ஒரு வித்தியாசமான யோசனையை முன்வைத்தார்.
2 மாதம்…வாரத்துக்குக் குறைந்தது 20 மணி நேரம்..விரைவு உணவகத்தில் பணியாற்றினால் தண்டனைக் காலத்தில் 60 நாள்கள் குறைக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)