கனடாவில் இளம்பெண்ணின் வீட்டை சோதனை செய்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனேடிய நகரமொன்றில், வீடு ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
போதைப்பொருள் கடத்தல் விசாரணை ஒன்று தொடர்பாக, Saskatchewan மாகாணத்திலுள்ள Prince Albert நகரில் வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்டார்கள்.
சோதனையின்போது அந்த வீட்டில் இரண்டு வகை போதைப்பொருட்கள், மூன்று துப்பாக்கிகள், குண்டு துளைக்காத உடை ஒன்று மற்றும் 2,000 டொலர்கள் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக Alexandra Tinker (27) என்னும் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 46,000 டொலர்கள் ஆகும்.





