இந்தியா

இந்தியாவில் முன்னாள் பாஜக MLA வீட்டைச் சோதனையிட்ட வருமான வரி சோதனைக்குச் சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக MLA வீட்டைச் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு மூன்று முதலைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னாள் பாஜக எம்எல்ஏவான ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி இருவர் மீதும் வரி ஏய்ப்புப் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.புகாரைத் தொடர்ந்து சாகர் நகரில் உள்ள அந்த இருவரின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்ததில் ரூ. 155 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரிய வந்தது.ஆவணங்களுடன் 3 கோடி ரூபாய் ரொக்கமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் அந்த இருவரின் வீடுகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹர்வன்ஷுடன் இணைந்து பீடி வியாபாரம் செய்த ராஜேஷ் மட்டும் ரூ. 140 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் வியாபாரம் தொடர்பான ஆவணங்களைச் சோதனை செய்தபோது அந்த விவரம் தெரிய வந்ததாகவும் செய்திகள் கூறின.மேலும், ராஜேஷ் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்யப்படாத கார்கள் இருப்பதும் தெரிய வந்தது.

பினாமி பெயரில் கார்கள் வாங்கியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் போக்குவரத்துத் துறையிடம் கார்கள் தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் கோரியுள்ளனர். அந்த கார்கள் எங்கிருந்து வந்தன என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார், பணம், நகைகள் தவிர, ஹர்வன்ஷ் வீட்டின் குளத்தில் மூன்று முதலைகளும் இருந்தன. உயிருடன் அவை நடமாடியதைக் கண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர், முதலைகள் அங்கு இருப்பது குறித்து வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!