பாகிஸ்தானில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி : 12 பேரின் சடலங்கள் மீட்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதியில் கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வாவில் உள்ள அப்பர் டிரில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (29.08) இரவு மண்மேடு சரிந்துள்ள விழுந்துள்ளது.
இதில் ஒன்பது குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாகிஸ்தான் முழுவதும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 40 times, 1 visits today)