பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவின் – ஆந்திர மாநிலத்தில் உள்ள உணவகமொன்றின் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனியார் உணவகத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் உணவுக்காக பிரியாணி பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பிரியாணியில் இறந்த நிலையில், பூரான் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கோபமடைந்த குடும்பத்தினர் உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு முறைப்பாடளித்துள்ளனர்.





