சிங்கப்பூரில் பயணம் செய்த இல்லப்பணிப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் இல்லப்பணிப்பெண் ஒருவருக்கு 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாகப் பெற்ற பணத்தைச் செலவுசெய்ததற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்ஸைச் சேர்ந்த மிக்மிக் சிண்டி என்ற பெண் அவருடைய வங்கிக் கணக்கிற்கு 17,000 வெள்ளி மாற்றப்பட்டதைக் கவனித்தார்.
அது தவறுதலாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று அறிந்திருந்தும் அவர் தொகையைச் செலவு செய்தார்.
அவர் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 15,560 வெள்ளியை எடுத்தார். தாயகம் செல்லவும் சில பொருள்களை வாங்கவும் சிண்டி தொகையைப் பயன்படுத்தினார்.
Tokio Marine Life Insurance Singapore எனும் காப்பீட்டு நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு அந்தத் தொகையை அனுப்பவேண்டியிருந்தது.
ஆனால் அது தவறாக, சிண்டியின் வங்கிக் கணக்கிற்குத் தொகையை அனுப்பிவிட்டது. வாடிக்கையாளர் தமக்குப் பணம் கிடைக்கவில்லை என்று சொன்னவுடன் அது தவற்றை உணர்ந்தது.
பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி சிண்டியிடம் DBS வங்கி கேட்டது. அவர் சுமார் 1,600 வெள்ளி மட்டுமே செலவு செய்யாமல் வைத்திருந்தார். அதை மட்டும் வங்கியிடம் ஒப்படைத்தார்.