ஐரோப்பா

துருக்கி ஜனாதிபதிக்கு மீசை வரைந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

துருக்கி ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்தின் மீது மீசை வரைந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி எர்கோடன் மூன்றாவது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி எர்கோடன் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை துருக்கி ஜனாதிபதி எர்கோடனுக்கு வரைந்துள்ளார். மேலும் அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் சிறுவன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், சிறுவன் மீசை வரைந்ததாக ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது ஜனாதிபதியை அவமதித்தது தொடர்பாக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்