ஐரோப்பா

பிரான்ஸில் விடுமுறைக்குச் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் நீச்சல் தடாகம் ஒன்றுக்குள் மூழ்கி இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தென்கிழக்கு பிரான்சான Alpes-Maritime நகரில் கடந் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்திலேயே சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற குறித்த சிறுவன் சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், பெற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் நீச்சல் தடாகத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

சில நிமிடங்களின் பின்னரே சிறுவன் தண்ணீருக்குள் விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேற்படி துன்ப நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்