பிரான்ஸில் ஒலிம்பிக் சுடரை ஏற்றிச் செல்லும் கப்பல்
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 79 நாட்களே உள்ளன.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் தீபம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்ஸ் பழைய மார்சேய் துறைமுகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவிற்கு பின் பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரில் ஏப்., 16ல் ஏற்றப்பட்ட தீபம், 11 நாட்கள் கிரீசில் பயணம் செய்து, 19ம் நூற்றாண்டில் பயணிக்க துவங்கிய பிரெஞ்ச் பாய்மரக்கப்பலான தி பெல்லம் மூலம் பிரான்சுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, பாரீஸ் ஒலிம்பிக்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் பின்னணியில், நிகழ்ச்சிக்கு முன்னதாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரான்ஸ் அதிகாரிகள் பாடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி 50,000 பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஒலிம்பிக் சுடரை வரவேற்கும் விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் கலந்து கொண்டார்.
இங்கு, பிரான்ஸைச் சேர்ந்த 1024 சிறிய படகுகள் மூலம் ஒலிம்பிக் சுடரை ஏற்றிச் செல்லும் பெலெம் பாய்மரக் கப்பல் மார்சேய் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
ஒலிம்பிக் சுடரின் வரவேற்பு விழாவும் வானவேடிக்கைகளின் கண்கவர் காட்சியால் வடிவமைக்கப்பட்டது. ட்ரோன்களைப் பயன்படுத்தி காற்றில் செய்யப்பட்ட இந்த அம்சம் அனைவரையும் கவர்ந்த வாய்ப்பாக அமைந்தது.