16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஏழு வயது சிறுமி பலி

வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் ஏழு வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்ததாக பிரான்சின் நோர்ட் டிபார்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.
படகு “இவ்வளவு பேரை ஏற்றிச் செல்வதற்கு ஏற்ற அளவில் இல்லை” என்று உள்ளூர் அதிகாரசபை ஒரு அறிக்கையில் கூறியது,
கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆ கால்வாயில் மக்கள் ஏறியவுடன் அது கவிழ்ந்தது.
மேலும் மூன்று குழந்தைகளுடன் பயணித்த சிறுமியின் பெற்றோர் டன்கிர்க்கில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அது மேலும் கூறியது.
(Visited 19 times, 1 visits today)