அமெரிக்க மக்களை வாட்டிவதைக்கும் அனல்காற்று – 60 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் ஏற்பட்ட அனல்காற்றினால் மக்கள் கடுமையாக பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை தெற்கேயுள்ள பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெயிலின் தாக்கம் அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.
வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸிற்குமேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெக்சஸின் சில பகுதிகளில் ஆக அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொது விடுமுறையான ஜூலை 4ஆம் திகதிவரை எந்தவொரு நிவாரண உதவியும் கிடைக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கவில்லை.
டெக்சஸின் மின்கட்டமைப்பு நிறுவனம் இவ்வாரத்துக்கான மின்சாரப் பயன்பாடு இதுவரை காணாத உச்சத்தைத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டது.
பலர் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். வீடில்லாதவர்கள் இந்தக் கொடூரமான வெப்பத்தைச் சமாளிக்கப் போராடுகின்றனர்.