கலவானை பிரேதச்சில் வழுக்கி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு..!

பாடசாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று (06) காலை 7.15க்கும் 7.30க்கும் இடையில் கலவானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடையவராவார்.வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது, மாணவி வழுக்கி விழுந்துள்ளார்.
இதன்போது அருகில் இருந்த ஒன்றரை அடி கொங்கிரீட் கல் அவரது கன்னத்தில் பலமாக மோதியது.இதில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
தெற்கு குகுலேகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 18 times, 1 visits today)