ஹொங்கொங்கில் 30 வினாடிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்!
சீனாவின் ஹொங்கொங் நகரில் உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் 30 வினாடிகளில் 1 பில்லியன் யென் (£4.7 மில்லியன்) திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நூதன கொள்ளை சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை காலை 09 மணியளவில் நாணய பரிமாற்றம் செய்யும் வணிக நிறுவனத்திற்கு வெளியே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரில் வருகை தந்த மூன்று பேர், மாட்டிறைச்சி வெட்டும் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கிரிப்டோகரன்சி மற்றும் ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் ஜப்பானிய நிறுவனத்தின் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நான்கு பெட்டிகளில் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், இரண்டு கார்களை பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





