சவூதி அரேபியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
சவூதி அரேபியாவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையம் அல்லது முன்ஷா வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் 2.6 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டிலுள்ள மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு இலட்சத்து முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரியாத் மாகாணம் 42.3 சதவீத நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 18.6 சதவீத நிறுவனங்கள் மக்கா மாகாணத்திலும், 11.1 சதவீத நிறுவனங்கள் கிழக்கு மாகாணத்திலும் இயங்கி வருகின்றன.
இவர்களில் 30.7 சதவீதத்திற்கும் அதிகமானோர் கட்டுமானத் துறையில் உள்ளனர். 11.6 சதவீதம் பேர் ஆதரவு மற்றும் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர்.
சுற்றுலாத் துறையில் புதிய முயற்சிகள் அதிகமாக வருகின்றன. இதற்கு உறுதுணையாக அரசு மட்டத்தில் சிறப்பு நிதி உதவியும் தயாராகி வருகிறது.
இதற்காக ஒரு பில்லியன் ரியால்களை ஒதுக்குவதற்கு சமூக அபிவிருத்தி வங்கியுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.