இலங்கை மக்களுக்கு இராணுவ தலைமையகம் விடுத்த கோரிக்கை
போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இராணுவ தலைமையகம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, பொறுப்பற்ற வகையில் சமூக ஊடக செயற்பாட்டார்கள் சிலர் போலி தகவல்கள் அடங்கிய காணொளியைப் பதிவேற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பிரதிபலன்கள் மற்றும் ஊடக நெறிமுறைகளுக்கு முரணான இவ்வாறான போலியான தகவல்களின் ஊடாக இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





