இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை!

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் அங்கீகாரத்துடன் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எழுத்துமூலம் அவகாசம் கோருமாறு ஆளுநர் சபையினால் விடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநர் கடந்த 22ஆம் திகதி நிதியமைச்சராக கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உண்மைகளை விளக்க வேண்டும்.

அந்த சந்தர்ப்பத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக் குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!