இந்தியாவில் Mpox நோயால் பாதிக்கப்பட்டவர் குறித்து வெளியான அறிக்கை
டெல்லி LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட mpox நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்று டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துளளார்.
அமைச்சர் பரத்வாஜ், காசநோய் மற்றும் டெங்குவைக் கையாள்வதற்கான அதன் தயாரிப்புகளை மதிப்பிடுவதற்கு முந்தைய நாள் மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
“LNJP மருத்துவமனையில் mpox நோயாளி ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பயண வரலாறு உள்ளது மற்றும் அவர் வெளிநாட்டு பயணத்தின் போது நோய்த்தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“நோயாளி தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் நிலையான நிலையில் உள்ளார்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் 26 வயதான நோயாளிக்கு பிறப்புறுப்பு புண்கள் மற்றும் தோல் வெடிப்புகள் மட்டுமே உள்ளன, ஆனால் காய்ச்சல் இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நோயாளி வைத்தியசாலையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பரத்வாஜ், mpox பற்றி பயம் தேவையில்லை, ஏனெனில் இது காற்றின் மூலம் அல்ல, தொடர்பு மூலம் பரவுகிறது என்று வலியுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சகம் இது “தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு” என்றும் பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.