ஆசியா

கின்னஸ் குழுவை வாய் பிளக்கச் செய்த சீனர் ஒருவர் செய்த சாதனை!

உலக சாதனைகள் பலவிதம். அவற்றில் சில, இதெல்லாம் ஒரு சாதனையா என வேடிக்கையுடன் வியக்க வாய்ப்புள்ளவை. அப்படியொரு கின்னஸ் சாதனையை சீனர் ஒருவர் அண்மையில் அரங்கேற்றி இருக்கிறார். வாயில் விழுங்கிய லிட்டர் கணக்கிலான நீரை, சாவகாசமாய் வாய்வழி வெளியேற்றுவதில் இவரது கின்னஸ் சாதனை சாத்தியமாகி இருக்கிறது.

சீனாவைச் சேர்ந்த, 35 வயதான மா ஹுய் என்பவர் 4.5 லிட்டர் தண்ணீரை விழுங்கிய கையோடு, அதனை 5 நிமிடம் 51.88 வினாடிகளுக்கு தொடர்ந்து வாயிலிருந்து பீய்ச்சி எடுத்துள்ளார். சுமார் 6 நிமிடங்களுக்கு தனது வாயை சிறிய நிரூற்று போலாக்கி பார்வையாளர்களையும், கின்னஸ் குழுவையும் வாய்பிளக்கச் செய்துள்ளார்.

இத்தகைய பிரிவில் இதற்கு முந்தைய சாதனையானது 2016ம் ஆண்டு எத்தியோப்பியாவைச் சேர்ந்த கிருபெல் யில்மா என்பவரால் வெறும் 56.36 வினாடிகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மா ஹூய், எவராலும் எளிதில் முறியடிக்க இயலாத பல மடங்கு தீவிரமான சாதனையை படைத்துள்ளார்.

Longest Time To Spray Water From Mouth - Guinness World Records

கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மா ஹூய் நிகழ்த்திய சாதனையின் வீடியோவை இன்று பகிர்ந்துள்ளது. எடுத்ததும் 4.5 லிட்டர் தண்ணீரை மா ஹூய் விழுங்குவதுடன் வீடியோ தொடங்குகிறது. அதன் அடுத்த விநாடியிலிருந்து விழுங்கிய நீரை நிதானமாக வாய் வெளியே வாளி ஒன்றுக்கு மாற்றுகிறார் மா ஹூய். அவர் அருகிலிருக்கு நிறுத்து கடிகாரம் ஒன்று, மா ஹூய் எவ்வளவு நேரம் வாயால் நீரை பீய்ச்சியடிக்கிறார் என பதிவு செய்கிறது.

சாதனையின் நிறைவாக, ​பதிவு செய்யப்பட்ட நேரம் 5 நிமிடங்கள் 51.88 வினாடிகள் எனக் காட்டுகிறது. முந்தைய சாதனையைவிட மா ஹூய் நிகழ்த்தியிருப்பது 6 மடங்கு அதிகமானது என்பதால், இப்போதைக்கு மா ஹூய் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது.

Human Fountain Sprouts Water from His Mouth Continuously for Six Minutes

வாயால் விழுங்கிய நீரை நிதனமாக வெளியில் எடுப்பது, 17-ம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்றிருக்கும் நுட்பங்களில் ஒன்று. அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது மற்றும் வயிற்றுத் தசையை முறைப்படி கட்டுப்படுத்தி, விழுங்கிய நீரை வெளியே நிதானமாக எடுப்பது இந்த நுட்பத்தில் அடங்கும். இதற்கு ஒருவர் தனது வயிற்றின் தசைகளை சிறப்பாக கட்டுப்படுத்த கற்றிருக்க வேண்டும்.

அமெரிக்க மேஜிக் நிபுணரான டேவிட் ப்ளெய்ன் உள்ளிட்ட ஒரு சிலர் உலகளவில், மேற்படி வாட்டர் ஸ்போட்டிங் உத்தியை நிகழ்த்துவதில் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களை தூக்கிச் சாப்பிடும் வகையில் சீனாவைச் சேர்ந்த மா ஹூய் தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்