ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் ஊழியருக்கு கிடைத்த அரிய வெற்றி

சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ராமலிங்கம் முருகன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.

37 வயதான முருகன், லொரியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது அதில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

24 பேருடன் பின்புறத்தில் வேலையிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறங்கும் போது கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் முருகன் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அஷ்ரப் சையத் அன்சராய் வாதிட்டார்.

இதில் முருகன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் கவனக்குறைவாக செயல்படவில்லை என்றும் தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், லாரியின் பின்புறத்தில் இருந்து நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் விழுந்ததாகவும், இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக S$100,000 நஷ்டஈடு கோரியும் அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில், இந்திய மதிப்பில் ரூ. 60.86 லட்சம் இழப்பீடு அவருக்கு கிடைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!