இந்தியா செய்தி

மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! மகன் விடுத்த கோரிக்கை

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார்.

“நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி’’ என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

மகன் ஏ.ஆர். அமீன், தனது இன்ஸ்டா பக்கத்தில் “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!