இலங்கை

SLMC-ன் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாந்தமருதில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்றதுடன் நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என்று போராட்டக்கரார்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலைவர் தின நிகழ்வுக்காக சாய்ந்தமருது ஊருக்கு வருகை தரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் ஆகியோர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், அவர்களது வருகையை கண்டிக்கும் வகையிலான சுலோகங்களையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வராதே …! வராதே..! ஹக்கீம் வராதே..! என கோசமெழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதனால் சாய்ந்தமருது கல்முனை பிரதான வீதியுடான போக்குவரத்துக்கள் சிறிது நேரம் தடைப்பட்டதுடன் போலீசார் நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் இப்போராட்டத்தில் பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்