ஒரு மணி நேர பயணத்தை ஒரு நிமிடமாக குறைக்க திட்டம் : சீனாவில் தயாராகும் பிரமாண்ட பாலம்!
உலகின் மிகப் பெரிய பாலமாக உருவாகும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டத்தின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் உள்ள ஹுவாஜிங் கிராண்ட் கேன்யன் பாலம் ஆற்றின் நீர் மட்டத்திலிருந்து நம்பமுடியாத 625 மீட்டர் உயரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
நீங்கள் நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தையும் லண்டனின் பிடி கோபுரத்தையும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால் இருக்கும் உயரத்தை விட இது பன்மடங்கு உயரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
குறித்த உள்கட்டமைப்பு காரணமாக ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை ஒரு நிமிடத்தில் பயணிக்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பாலம் சீனாவின் Guizhou மாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் மற்றும் “கிராமப்புற மறுமலர்ச்சிக்கு” ஊக்கமளிக்கும் என்று நம்பப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)