இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!
காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு மாற்றப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் காணாமல் போன பணயக்கைதிகளில் எவருக்கும் சொந்தமானவை அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நேற்று குறித்த மூன்று உடல்களும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருப்புக்களால் மீட்கப்பட்ட பணயக்கைதியின் உடல்களை விடுவிப்பதன் மூலம் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போரில் கொல்லப்பட்ட 360 பாலஸ்தீன போராளிகளுக்கு ஈடாக இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அவர்களில் 11 பணயக்கைதிகளின் உடல்கள் இன்னும் திருப்பித் தரப்படவில்லை.
ஹமாஸ், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
காசாவில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் இடிபாடுகளை சல்லடை போட்டு அகற்ற உபகரணங்கள் இல்லாததால், அவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக ஹமாஸ் வாதிடுகிறது.
இந்த முறண்பாடான நிலைப்பாடு இரு நாடுகள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் காசா மீது வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார், இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




