இலங்கை செய்தி

கோழி ஒன்றால் வந்த வினை!! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி, ஒருவர் கைது

அளுத்கம – தன்வத்தகொட பிரதேசத்தில் கோழி ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர் காயமடைந்த நிலையில் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கிணற்றில் இருந்து தண்ணீர் பெறும் வீடொன்றில் இருந்த கோழி ஒன்று கிணற்றில் விழுந்துள்ளதுடன், கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர் கோழியை அகற்றி சுத்தம் செய்யுமாறு கோழியின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

கோழியின் உரிமையாளர் கண்ணாடி போத்தலை உடைத்து கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளரை தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை