இலங்கை

ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் மடுமாதா ஆலயம் – ஜுலி சங் நெகிழ்ச்சி!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (26.08) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் இட்டுள்ள பதிவில்,  இந்த கலந்துரையாடலில் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கிய பங்கு குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன் எனவும்,  இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல நூற்றாண்டுகள் மற்றும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜுலி சங், மன்னார் ஆயரை மன்னார் ஆயர் இல்லத்திலும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகர் எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் ஆகியோரை மடு திருத்தலத்திலும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்