பாரிஸில் துப்பரவு தொழிலாளியை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி!
பாரிஸின் வடக்கு புறநகரில் ஒரு பிரெஞ்சு காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பரவு பணியாளரை ஸ்க்ரூடிரைவர் கொண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அவரை தடுக்க முற்பட்ட மற்றுமொரு காவல் அதிகாரியும் காயமடைந்துள்ளார்.
பின்னர் மற்றொரு அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் தாக்குதல்தாரி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாரிஸின் புறநகர் பகுதியான ஆபர்வில்லியர்ஸில் நடந்த தாக்குதல் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. அதாவது தாக்குதலுக்கான நோக்கம் வெளியாகவில்லை.
இந்நிலையில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





