தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் -திஸ்ஸ அத்தநாயக்க

தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாட்டை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “சுதந்திரமான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளது.
தேர்தலை நடத்த முடியாது என்பதை ஜனாதிபதியால் தீர்மானிக்க முடியாது. மக்கள் தேர்தலை விரும்புகின்றனரா இல்லையா என்பதை அறிய வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதனை விடுத்து ஜனாதிபதியின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு இடமளிக்க முடியாது. தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே இது தொடர்பில் தற்போது ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டுள்ளமை பொறுத்தமற்றது” எனக் கூறினார்.