இத்தாலியின் பழுதுபார்க்கச் சென்றிருந்த ஊழியர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

இத்தாலியின் Como நகரில் உள்ள Cressoni திரையரங்கின் கீழ்த்தளத்தைப் பழுதுபார்க்கச் சென்றிருந்த ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிஷ்டம் ஒன்று கிடைத்துள்ளது.
பழங்காலப் பானை ஒன்றில் நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் கண்டுபிடித்தனர். புதையலைக் கண்டுபிடித்ததும் பழுதுபார்க்கும் பணிகளை ஊழியர்கள் நிறுத்தி வைத்து வேறு புதையல்களைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்தனர்.
தங்க நாணயங்கள் ஆராயப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடைசி ரோமானியப் பேரரசர்களுக்கு அவை சொந்தமானவை என்று இத்தாலியின் கலாசார, பாரம்பரியத்துக்கான அமைச்சர் தெரிவித்தார்.
Cressoni திரையரங்கில் இன்னும் அதிகமான புதையல்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அங்கு நடத்தத் திட்டமிடப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
(Visited 19 times, 1 visits today)