ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும் விமானம் : பயணநேரம் 01 மணித்தியாலமாக குறையுமாம்!
லண்டனில் இருந்து நியூயார்கிற்கு ஒரு மணிநேரத்தில் பயணிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இந்த ஆச்சரியமான பயணம் விரைவில் நடைமுறையில் வரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
புதிய ‘ஹைப்பர்சோனிக்’ லைனர் விமானத்தின் மூலம் இந்த கனவு பயணம் சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது. இதற்கான வேலைப்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வீனஸ் ஏரோஸ்பேஸ் எனப்படும் டெக்சாஸ் விண்வெளி நிறுவனம், ஸ்டார்கேசர் என்ற ஜெட் விமானத்தை இயக்கும் இயந்திரத்துடன் வேலை செய்கிறது.
ஸ்டார்கேஸர் என்று அழைக்கப்படும் ஹைப்பர்சோனிக் ஜெட் விரைவில் அட்லாண்டிக் முழுவதும் 4,600 மைல் வேகத்தில் பயணிக்கும்.
ஸ்டார்கேசர் ‘ஹைப்பர்சோனிக்’ ஆக இருக்கும். அதாவது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன் மற்ற விமானங்களை விட உயரமாக பறக்கும்.
வணிகப் பயணத்திற்கு அனுமதித்தால், $33 மில்லியன் ஜெட் விமானம் லண்டனில் இருந்து நியூயார்க்கிற்கு 3,459 மைல் பயணத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது நாசாவின் வரவிருக்கும் விமானத்தை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.