2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் தரையிறங்கிய விமானம் – இருமுறை புத்தாண்டைக் கொண்டாடிய பயணிகள்
2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் தரையிறங்கிய விமானம் – இருமுறை புத்தாண்டைக் கொண்டாடிய பயணிகள்
2025ஆம் ஆண்டு புறப்பட்டு 2024ஆம் தரையிறங்கிய விமானத்தால் பயணிகள் இருமுறை புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
Cathay Pacific விமானத்தில் பயணம் செய்தோரே இவ்வாறு இருமுறை புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர். இது பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாகியுள்ளது.
Cathay Pacific CX-880 விமானம், புத்தாண்டு தினத்தன்று ஹொங்காங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி அது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்க நேரப்படி இரவு சுமார் 8.30 மணிக்குத் தரையிறங்கியது.
ஹாங்காங்கிற்கும் லாஸ் ஏஞ்சலிஸுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசமே இதற்கு காரணமாகும்.
லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் நேரம் ஹொங்காங்கை விட 16 மணி நேரம் பின்னுக்கு உள்ளது.