அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் நுழைந்த விமானம் விபத்துக்குள்ளாகியது – நால்வர் பலி!
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசியில் கட்டுப்பாடுகள் கொண்ட வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை போர் அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், குறித்த தனியார் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ்னா ரக விமானமொன்று வேர்ஜீனியா மாநிலத்தில் இவ்வாறு வீழ்ந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
டென்னஸி மாநிலத்தின் எலீஸாபெத்டவுன் நகரிலிருந்து நியூயோர்க் நகரின் லோங் ஐலண்ட் பிராந்தியத்தை நோக்கி புறப்பட்ட குறித்த விமானம், தலைநகர் வொஷிங்டன் டிசியில் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிக்குள் பிரவேசித்தது.
அவ்விமானத்தின் விமானி பதிலளிக்காத நிலையில் இவ்விமானத்தை விலகிச் செல்ல வைப்பதற்காக இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.
ஒலியைவிட அதிக வேகத்தில் அவ்விமானங்கள் பறந்ததால் ஏற்பட்ட ஒலி அதிர்வு ( வொஷிங்டன் டிசி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில மணித்தியாலங்களின் பின்னர் வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வேர்ஜீனியா மாநிலத்தில் அவ்விமானம் வீழ்ந்து நொறுங்கியது.
இவ்விமானம் எவ்வாறு வீழ்ந்தது என்பது தெரியவில்லை. படையினரின் அழைப்புகளுக்கு செஸ்னா விமானத்தின் விமானி ஏன் பதிலளிக்கவில்லை என்பதும் தெரியவில்லை. அதேநேரம் குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.