பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட விமானம்

சேவையில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ள ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் இந்தியாவில் கொண்டு செல்லப்பட்டபோது பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.
இந்த விமானம் 2021 இல் ஏர் இந்தியாவால் டிஸ்கமிஷன் செய்யப்பட்டது, ஆனால் அதை சமீபத்தில் ஏலத்தில் ஒரு தொழிலதிபர் வாங்கியதாக கூறப்படுகிறது.
இவ்வாறு வாங்கப்பட்ட விமானம் மும்பையில் இருந்து அஸ்ஸாமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது பாலம் அருகே சிக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த வர்த்தகர் இந்த விமானத்தை உணவகமாக மாற்றும் நோக்கில் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 14 times, 1 visits today)