செவ்வந்தி மாறு வேடத்தில் வெளிநாடு தப்பத் திட்டம் ?

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சூத்திரிதாரியாக கருதப்படும் துப்பாக்கி தாடிக்கு துப்பாக்கியை வழங்கியதாக கூறப்படும் இரேஷா செவ்வந்தி மாறு வேடம் பூண்டு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவரை பொலிசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் இவர் ஒவ்வொரு இடத்தில் பதுங்கி இருந்து நேரத்துக்கு நேரம் இடம் மாறி வருவதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தெஹிவலை விடுதி ஒன்றில் இவர் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலை எடுத்து அவ்விடம் முற்றுகையிடப் பட்ட போதிலும் இவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும் மதுகம பகுதியில் இவர் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்போது தேர்தல்ஜநடத்திய போதிலும் அவர் வேறு இடம் ஒன்றுக்கு இவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.