இணையத்தில் வெளியான புகைப்படம்… வெளிச்சத்துக்கு வந்த நாட்டின் மிக கொடூரமான சம்பவம் !
அவுஸ்திரேலியாவில் முன்னாள் சிறார் காப்பக ஊழியர் ஒருவர் மீது 91 குழந்தைகளை சீரழித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய சம்பவம் பற்றி, பொலிஸார் தெரிவிக்கையில், நாட்டின் மிகவும் கொடூரமான சிறார் துஸ்பிரயோக வழக்கு என குறிப்பிட்டுள்ளனர். 45 வயதான அந்த நபர் மீது 1,623 தனி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதில் 136 பலாத்கார வழக்குகள் மற்றும் 110 வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டார்க் வெப் இணையத்தில் சிறார் துஸ்பிரயோக புகைப்படம் ஒன்று வெளியாக, அதிகாரிகள் தரப்பு சந்தேகத்தின் அடிப்படையில் அந்த புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்த,தொடர்புடைய புகைப்படமானது ஒரு சிறார் காப்பகத்தில் பதிவானதாக கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையை முடுக்கிவிட்ட அதிகாரிகள் தரப்பு, அந்த புகைப்படமானது பிரிஸ்பேனில் உள்ள சிறார் காப்பகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்தே அந்த 45 வயது முன்னாள் சிறார் காப்பக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக, அவரது அலைபேசி மற்றும் கணினியை ஆய்வு செய்த அதிகாரிகள் உறைந்து போயுள்ளனர்.மொத்தமாக 4,000 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அதிகாரிகள் அதில் இருந்து மீட்டுள்ளனர். 2007 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 10 காப்பகங்களில் நடந்த துஸ்பிரயோகம் இதுவென அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, 1 வயது குழந்தை வரையில் அந்த நபரின் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 91 சிறார்களில் 87 பேர் அவுஸ்திரேலியர்கள் எனவும்,2013 முதல் 2014 வரையில் அந்த நபர் வெளிநாட்டில் பணியாற்றியுள்ளதால் எஞ்சிய சிறார்கள் வெளிநாட்டவர்கள் எனவும் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
நாட்டை உலுக்கிய இந்த வழக்கினை விசாரிக்க குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் இருந்து சுமார் 35 சிறப்பு விசாரணை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மட்டுமின்றி, அந்த நபரின் வயது மட்டுமே வெளியிடப்பட, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற ஆணைக்கு பின்னரே வெளியாகும் என கூறப்படுகிறது.