பிலிப்பைன்ஸ் விமானப்படையின் போர் விமானம் மாயமானதாக தகவல்!

பிலிப்பைன்ஸ் விமானப்படையின் போர் விமானம் காணாமல் போனதாகவும், விரிவான தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடும் தரைப்படைகளுக்கு ஆதரவாக இரவு நேர தாக்குதலின்போது குறித்த விமானங்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவில் மற்ற விமானப்படை விமானங்களுடனான தந்திரோபாயப் பணியின் போது FA-50 ஜெட் விமானம், இலக்குப் பகுதியை அடைவதற்கு முன்பு தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.
குறித்த விமானத்தை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மீதமுள்ள FA-50 விமானங்கள் தரையிறக்கப்படுமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
(Visited 1 times, 1 visits today)