வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற நபருக்கு கிடைத்த வாழ் நாள் அதிஷ்டம்!

அமெரிக்காவின் Oregon மாநிலத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவருக்கு மிகப்பெரிய அதிஷ்டம் கிடைத்துள்ளது.

ஒரு முறை அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாரத்துக்கு 1,000 டொலர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Robin Riedel இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வேலையிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் 2001ஆம் ஆண்டிலிருந்து அதிர்ஷ்டக் குலுக்கில் தொடர்ந்து கலந்துகொண்டதாகக் கூறினார். ரிடலுக்கு ஓர் ஆண்டில் மொத்தம் 52,000 டொலர் கிடைக்கும்.

கட்டணங்களைச் செலுத்துவது, வீட்டைப் புதுப்பிப்பது, திருமண நாளைக் கொண்டாட Saint Luciaவுக்கு விடுமுறைக்குச் செல்வது, ஆகிய வழிகளில் அதைச் செலவழிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக Oregon Lottery தெரிவித்தது.

இதற்கு முன்பு செய்ய முடியாத பலவற்றைக் கிடைக்கும் பணத்தை வைத்துச் செய்ய விரும்புவதாகவும் அவர் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்