உணவு, தண்ணீர் இன்றி 42 மணி நேரம் லிஃப்டில் சிக்கிக் கொண்ட நபர்
தென்னிந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் இருந்து 42 மணி நேரம் உணவு, தண்ணீர் இல்லாமல் மருத்துவமனை லிஃப்டில் சிக்கிக் கொண்ட நபர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
59 வயதுடைய நபரே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவர் சனிக்கிழமை மதியம் மருத்துவரை சந்திப்பதற்காக லிப்டில் நுழைந்ததாகவும், அது பழுதடைந்ததால் லிப்டில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் முதுகுவலி காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தான் சிக்கிக்கொண்டபோது லிஃப்டில் பட்டியலிடப்பட்ட அவசர எண்ணை அழைக்க முயற்சித்தேன், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த விபத்தை எதிர்கொண்ட நபர்,
“நான் பீதியடைந்து லிஃப்ட் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தேன். அப்போது என் போன் தரையில் விழுந்து அணைக்கப்பட்டது. நான் உதவிக்காக அலறிக் கொண்டு என் கைகளால் கதவுகளைத் திறக்க முயன்றேன். பின்னர் லிஃப்ட் இருட்டாகிவிட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக சுவாசிக்க போதுமான காற்று இருந்தது.
மணிகள் கடந்தும், உள்ளே இருந்த கருமையால் பகலா இரவா என்று தெரியவில்லை. நான் சோர்வாக இருந்தபோது, ஒரு மூலையில் தூங்கினேன். சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும் வேறு ஒரு மூலையை பயன்படுத்த வேண்டியதாயிற்று’’ என்றார்.